சுப்மன் கில்லை நம்புங்க .. ஒரு கேப்டனா கண்டிப்பா திரும்ப வருவார் ! நம்பிக்கை அளிக்கும் மேத்யூ ஹைடன் !!
சென்னை : ஐபிஎல் தொடரின் குஜராத் அணியின் கேப்டனான சுப்மன் கில்லை அணியில் இருப்பவர்கள் நம்ப வேண்டும் என ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது கூறி இருந்தார்.
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் செயல்பட ஆரம்பித்தார். இந்த தொடரின் தொடக்கத்தில் நன்றாக பேட்டிங் ஆரம்பித்த அவரால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அவர் இந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 426 ரன்கள் எடுத்திருந்தாலும் அவரை இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்காக ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பல கலவையான விமர்சனங்கள் சமூக வளைத்தளத்தில் எழுந்தது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டதனால் தான் அவரால் சரியாக பேட்டிங்கில் செயல்பட முடியவில்லை என கருத்துக்களும் எழுந்தது. இந்நிலையில், அவரால் ஒரு கேப்டனாக ஒரு பேட்ஸ்மானாக திரும்பவும் வருவார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் பேசி இருந்தார்.
இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய அவர், “ஒரு கேப்டனாக தன்னை நிருபித்து கொள்ள கில் எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். ஒரு முறை ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் வாக் எங்களிடம் பேசும் பொழுது, ‘நான் கேப்டனாக இருப்பதால் யாரும் காத்துக் கொண்டே இருக்க வேண்டியது இல்லை. நீங்கள் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு கேப்டன் போல நடந்து கொள்ளுங்கள். அதே நேரம் உங்கள் மாநில அணிக்காக விளையாடும் பொழுது நீங்கள் அதை அப்படியே பின்பற்றுங்கள்.
அதை தொடர்ந்து நீங்கள் உங்கள் நாட்டிற்காக விளையாட வரும் பொழுது கேப்டனாக என்னுடைய வேலை எளிதாகிவிடும்’ என்று அவர் கூறினார். இதே போல தற்போது கில்லை அவருடைய அணியில் இருக்கும் வீரர்கள் ஒரு கேப்டனாக நம்பவும் மதிக்கவும் வேண்டும். ஒரு கேப்டனாக அவரால் முடியுமா? என்று என்னை கேட்டால் கண்டிப்பாக முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸில் பேசிய பொழுது கூறி இருந்தார்.