அழகான குடும்பம்… மகளுடன் விடுமுறை… ரோஹித் ஷர்மா பகிர்ந்த க்யூட் வீடியோ.!

Rohit Family

இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கொண்டாடும் வீடீயோவை பகிர்ந்துள்ளார்.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுகிப்போட்டிக்கு பிறகு ஒருமாத இடைவேளைக்கு பிறகு மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கிடையில் இந்திய அணிக்கு ஒரு மாதம் வரை எந்த போட்டியும் கிடையாது. இதனால் இந்திய அணி வீரர்கள் தங்களது விடுமுறையை குடும்பத்துடன் செலவழித்து வருகின்றனர்.

இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, தனது விடுமுறையில் குடும்பத்தினருடன் வால்ட் டிஸ்னி வேர்ல்ட்(Walt Disney World) தீம் பார்க்கில், தன் மகளுடன் விளையாடிய வீடீயோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கடந்த ஜூன் 7இல் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மேலும் கேப்டன் ரோஹித்தும் ஐபிஎல் தொடர் முதலாக நடந்து முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை பேட்டிங்கில் ஃபார்மின்றி தவித்து வருகிறார். இதனால் தற்போது கிடைத்துள்ள இடைவேளை ரோஹித் ஷர்மா உட்பட இந்திய வீரர்களுக்கு புத்துணர்வாக அமையும்.

ரோஹித் ஷர்மா தனது மகளை தன் தோள் மீது வைத்துக்கொண்டு, வால்ட் டிஸ்னி வேர்ல்ட்டில் அனுபவித்த மகிழ்ச்சியை இன்ஸ்டாவில் மேஜிக்கல் ஈவினிங் என்று பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rohit Sharma (@rohitsharma45)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்