பிசிசிஐ போட்ட அதிரடி கண்டிஷன்! விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு?
ரஞ்சி கோப்பை தொடரில் டெல்லி அணியின் அடுத்த லீக் ஆட்டமான (30-ந்தேதி ரெயில்வே அணிக்கு எதிராக) விராட் கோலி விளையாடவுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ சமீபத்தில் இந்திய வீரர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதில் குறிப்பாக, தேசிய அணிக்கு தகுதியான மற்றும் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் அனைவரும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என திட்டவட்டமாக அறிவித்து இருந்தது. எனவே, ரோஹித் சர்மா, ஜடேஜா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட பலரும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடவுள்ளதை உறுதிப்படுத்தி இருந்தார்கள்.
இந்த சூழலில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான விராட் கோலியும் ரஞ்சி ட்ராபி தொடரில் விளையாட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு (Ranji Trophy 2025) இரண்டாம் கட்ட போட்டிகள் வரும் ஜன. 23ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இந்த தொடரில் மற்ற வீரர்கள் விளையாடுவார்கள் என முடிவு செய்யப்பட்டிருந்தாலும் விராட் கோலி மட்டும் விளையாடுவார் என்கிற கேள்வி எழுந்திருந்தது ஏனென்றால், அவருக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டதால் அவர் சில போட்டிகளில் விளையாடுவாரா என்பது சந்தேகம் தான் என தகவல்கள் முன்னதாக வெளியாகி இருந்தது.
ஆனால், பிசிசிஐ போட்ட அதிரடி கண்டிஷன் காரணமாக விராட் கோலி கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு ரஞ்சி ட்ராபி தொடரில் விளையாட முடிவு செய்துள்ளார். ஜனவரி 30ஆம் தேதி தொடங்கும் டெல்லி – ரயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளார். இந்த தகவலை, டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் சரண்தீப் சிங் உறுதிசெய்துள்ளார்.
ரஞ்சி டிராபியில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி விளையாடியிருந்தார். அதன்பிறகு அவர் விளையாடாமல் இருந்த நிலையில், தற்போது 12 வருடங்கள் கழித்து அவர் மீண்டும் விளையாட வந்துள்ள காரணத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.