ஸ்டீபன் ஃப்ளெமிங்கை குறி வைக்கும் பிசிசிஐ ? அப்போ அடுத்த பயிற்சியாளர் இவர் தானா ?

Stephen Fleming

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிடுக்கு அடுத்த படியாக ஸ்டீபன் ஃப்ளெமிங்கை செயலாற்ற வைக்க பிசிசிஐ திட்டம் தீட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிடின் பதவிக்காலமானது இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு புதிய தலைமை பயிற்சியாளரை செயலாற்ற வைக்க பிசிசிஐ திட்டம் வகுத்து வந்த நிலையில் புதிய பயிற்சியாளருக்கான தேடலில் இருந்து வருகிறது. அந்த பதவிக்கான தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே பிசிசிஐ X தளத்தில் அறிவித்திருந்தது.

மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்ந்து பணியாற்ற ராகுல் டிராவிட்டும் பெரிதாக விருப்பம் தெரிவிக்காத நிலையில் இந்த தேடலில் சர்வேதச கிரிக்கெட் போட்டிகள் விளையாடும் உலக நாடுகளிலிருந்த்து பல நிபந்தனைகளுடன் திறமையான தகுதியுள்ள ஒருவரை தேர்வு செய்ய பிசிசிஐ எதிர்ப்பார்க்கிறது. இந்நிலையில், பிசிசிஐ புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிகிறது.

அது என்னவென்றால் ஐபிஎல் தொடரில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற பயிற்சியாளரான சிஎஸ்கே அணியின் தலைமைபயிற்சியாளராக பணியாற்றி வரும் ஸ்டீபன் பிளெமிங்கை இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கும் எண்ணத்தில் பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வரும் ஸ்டீபன் பிளெமிங் வெற்றிகரமான பயிற்சியாளரான ஐபிஎல் தொடரில் பணியாற்றி வருகிறார். மேலும், சிஎஸ்கே அணியை வைத்து 5 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரிடம் பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்த முற்படுவதாக கிரிக்கெட் வட்டாரங்களில் சில தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால், அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவிக்காததாகவும், அந்த பேச்சு வார்த்தைக்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும், இந்த சலுகையை அவர் ஏற்க மாட்டார் எனவும் வெளியான தகவல்கள் மூலம் தெரிகிறது. மேலும், அவர் இந்திய அணிக்கு பணியாற்றுவது அவரது விருப்பம் என்பதால் பிசிசிஐயும் அவரை வற்புறுத்தாது எனவும் தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்