BCCI தன் மீதான மேட்ச் ஃபிக்சிங்(Match Fixing) புகாருக்கு விரிவான விசாரணை நடத்த முகமது ஷமி கோரிக்கை!
மேட்ச் ஃபிக்சிங் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தன்மீது தனது மனைவி கூறியுள்ள புகார் குறித்து பி.சி.சி.ஐ. விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
முகமது ஷமி மீது அவரது மனைவி ஹாசின் ஜஹான் அளித்த குடும்ப வன்முறை புகார்களின் பேரில் ஷமி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஷமி மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் பாகிஸ்தான் பெண் ஒருவரிடம் இருந்து பணம் பெற்றதாகவும் ஹாசின் ஜஹான் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பி.சி.சி.ஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மேட்ச் ஃபிக்சிங் எதிலும் ஈடுபடவில்லை என்றும், எதிர்காலத்திலும் அது போன்ற தவறுகளில் ஈடுபடப்போவதிலை என்றும் தெரிவித்துள்ள முகமது ஷமி, இது தனது நற்பெயரைக் கெடுப்பதற்கான சதி என்று கூறியுள்ளார். தான் பி.சி.சி.ஐ.யின் முழு ஆதரவை கோருவதாகவும், விரிவான விசாரணை நடத்தி உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்றும் ஷமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.