#BREAKING: கிரிக்கெட் வீரர்களின் போட்டி ஊதியம் உயர்வு – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு!
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டி ஊதியம் உயர்த்தப்படுகிறது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
உள்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் உயர்த்தியுள்ளது. அதன்படி, 40 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ள மூத்த வீரர்களுக்கான போட்டி ஊதியம் ரூ.60,000 உயர்த்தப்படுகிறது. அதே நேரத்தில், 23 வயதுக்குட்பட்ட வீரர்களின் போட்டி ஊதியத்தை ரூ.25,000 ஆகவும், 19 வயதுக்குட்பட்ட வீரர்களின் கட்டணத்தை ரூ.20,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் வீரர்களின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டி கட்டண உயர்வை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
இது தவிர, உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட முந்தைய சீசனுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பை கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் 50 சதவீத இழப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கும் என தகவல் கூறப்படுகிறது.
ரஞ்சி கோப்பையில், ஒரு வீரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.35,000 மற்றும் ஒரு போட்டி கட்டணத்திற்கு ரூ.1.4 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் 70 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கிரிக்கெட் வாரியம் வழங்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
I am pleased to announce the hike in match fee for domestic cricketers.
Seniors – INR 60,000 (above 40 matches).
Under 23- INR 25,000
Under 19 – INR 20,000#BCCIApexCouncil
— Jay Shah (@JayShah) September 20, 2021