இங்கிலாந்துக்கு தேவ்தத் படிக்கல், பிருத்வி ஷாவை அனுப்ப பிசிசிஐ மறுப்பு..!
பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கலை இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ மறுப்பு
நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தIND vs ENGதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4- ஆம் தேதி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேறப்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார்கள்.
இந்த நிலையில், நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில், தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இருவரும் அதே போல இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுப்மன் கில்லுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவர் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில், இலங்கைக்கு சென்றுள்ள தேவ்தத் படிக்கல், பிருத்வி ஷா இருவரையும், இங்கிலாந்திற்கு அனுப்ப இந்திய அணி சார்பில் கடந்த மாதம் ஜூன் 28 ஆம் தேதி தேர்வாளர்களுக்கு கடிதம் அனுப்பட்டது. ஆனால், ஏற்கனவே கே.எல்.ராகுல் மற்றும், அபிமன்யூ ஈஸ்வரன் இருப்பதால் கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்ததாகவே கூறப்படுகிறது.