அடுத்த ஆண்டு முதல் ஆறு அணிகள் கொண்ட மகளிர் ஐபிஎல் போட்டி – பிசிசிஐ முன்மொழிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அடுத்த ஆண்டு முதல் 6 அணிகள் கொண்ட மகளிர் ஐபிஎல் போட்டியை நடத்த முன்மொழிவு.

மும்பையில் நேற்று நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் ஆளும் கவுன்சில் (ஜிசி) கூட்டத்தில், 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கான உரிமையை அடிப்படையாகக் கொண்ட வருடாந்திர டி20 போட்டியைத் தொடங்க (womensipl2023) முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நேரில் சந்தித்த GC உறுப்பினர்கள், அணிகளை சொந்தமாக்க ஏற்கனவே உள்ள ஐபிஎல் உரிமையாளர்களுக்கு முதல் முன்னுரிமை கொடுக்க முடிவு செய்தனர். அந்த விருப்பம் முடிந்தவுடன், ஏலம் எடுக்க வெளியில் இருந்து அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு அணிகள் கொண்ட பெண்கள் ஐபிஎல் லீக்கின் சாத்தியக்கூறுகள், குறித்து  ஆராயப்படும் என்று GC உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஆண்கள் ஐபிஎல் போட்டிகளுடன், பெண்கள் ஐபிஎல் போட்டிகள் நடத்துவது சாத்தியமில்லை. மகளிர் ஐபிஎல் போட்டி குறித்து வரும் நாட்களில் ஆராய்ந்து  மற்றும் AGM-இன் ஒப்புதல் பெறப்படும் என்று GC உறுப்பினர் விரிவாகக் கூறினார்.

இந்த ஆண்டு முதற்கட்டமாக அதாவது ஒரு முன்னோட்டமாக ஆண்கள் ஐபிஎல் தொடரின் இறுதியில், மகளிர் ஐபிஎல் தொடருக்கான மூன்று அணிகளுடன் (நான்கு போட்டிகள்) நடத்தப்பட உள்ளதாகவும், இந்த போட்டிகள் அனைத்தும்  அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், மகளிர் ஐபிஎல் லீக்கை நிதி நிலைத் தன்மையைப் பொருட்படுத்தாமல் தொடங்குவது வாரியத்தின் பொறுப்பு என்று கூறினார். இந்தியாவில் பெண்கள் ஐபிஎல் தொடரை தொடங்குவதற்கு பிசிசிஐ சில காலமாக முயற்சி எடுத்து வருகிறது.

கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (CWI) இந்த ஆண்டு முதல் மூன்று அணிகள் கொண்ட லீக்கை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) மற்றும் அண்டை நாடான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆகியவற்றுடன் இதே போன்ற இருக்கும் நிலையில், இந்தியாவிலும் பெண்கள் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐயும் நேற்று நடந்த கூட்டத்தில் முன்மொழிந்துள்ளது.

GC-ஆனது 2023-27 சுழற்சிக்கான IPLக்கான ஊடக உரிமை ஒப்பந்தத்தை அனுமதித்தது. டெண்டருக்கான அழைப்பிதழ் (ITT) ஆவணம் செவ்வாய் அல்லது புதன்கிழமை வெளியாகும் என்று கூறப்படுகிறது. முன்பு அறிவிக்கப்பட்டபடி, ஏலம் எடுக்கும் நபர்களுக்கு பல விருப்பங்கள் இருக்கும், அவர்கள் ரூ.1000 கோடி நிகர மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் மகளிர் பிக் பேஷ் போன்ற தொடர்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. எனவே, இந்த வருடம் ஐபிஎல் தொடரின் இறுதி நாட்களில் ஒருசில போட்டிகளை கொண்ட மகளிர் ஐபிஎல் நடைபெறும் எனவும் தெரியவருகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் முறையாக 8 அணிகளுடன் தோற்றுவிக்கப்பட்ட ஐபிஎல் தொடர் இன்று 10 அணிகள் விளையாடும் அளவுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த சமயத்தில் மகளிர் ஐபிஎல் போட்டி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

30 minutes ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

35 minutes ago

திருவாதிரை ஸ்பெஷல் ஏழு காய் கூட்டு செய்வது எப்படி.?

சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…

42 minutes ago

HMPV வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்ன?

HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…

52 minutes ago

பொங்கல் தொகுப்பு பெறுபவர்களே… நாளை ரேஷன் கடைகள் செயல்படும்!

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…

1 hour ago

நாளை தொடங்கவிருக்கும் கார் ரேஸ்… சீறி பாய தயாராகும் அஜித் குமார்!

துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…

1 hour ago