பாண்டியா மற்றும் ராகுலுக்கு வித்யாசமான தண்டனை கொடுத்த பிசிசிஐ!! கிரேட் எஸ்கேப்
பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து கூறிய ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து இந்த பிரச்சினை பூதாகரமாக்கியது பிசிசிஐயின் கிரிக்கெட் நிர்வாக குழு. இதனை தொடர்ந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இருவரும் மன்னிப்பும் கோரினார்.
இதனை சும்மா விடாதே அந்த நிர்வாகக்குழு இருவருக்கும் விசாரணை கமிஷன் வைத்து விசாரித்து .இந்த விசாரணையின் முடிவில் கார்த்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு தலா 20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மேலும், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் வழங்க வேண்டும் எனவும் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக 10 லட்சத்தை இருவரும் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்த தொகையை அடுத்த நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.