களைகட்டும் WC23 திருவிழா.! 1.20 லட்சம் அடி உயரத்தில் விண்வெளியில் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் உலகக்கோப்பை.!

WC23 - world cup

WC23 உலககோப்பையை பிரபலப்படுத்தும் வகையில் 1.20 லட்சம் அடி உயரத்தில் விண்வெளியில் நிறுத்தியது இந்திய கிரிக்கெட் வாரியம்.

இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் துவங்க உள்ளது.

தற்போது இதனை விளம்பரப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் களமிறங்கி உள்ளது. அதன் ஒரு படியாக உலக கோப்பையை விண்வெளியில் நிலை நிறுத்தி சாதனை புரிந்துள்ளது. பூமி மட்டத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் சிறப்பு பலூன் மூலம் உலககோப்பையானது நிலைநிறுத்தப்பட்டது. இதனை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெய்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அடுத்ததாக இந்த கிரிக்கெட் உலக கோப்பையானது, அமெரிக்கா நைஜீரியா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா,  உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதியில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்