BCCI : இஷான் – ஷ்ரேயஸுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ ..! சொன்னதை செஞ்சுக்காட்டிய ஜெய்ஷா ..!
BCCI : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களுக்கு வருடம்தோறும் ஊதியம் ஒப்பந்தம் பட்டியலை மாற்றியமைப்பது வழக்கமாகும். அதே வேளையில், அந்த பட்டியலில் இந்திய அணியின் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
Read More :- ICC Test Ranking : சொல்லி அடிக்கும் ஜெய்ஸ்வால் ..! பேட்டிங் தரவரிசையில் அதிரடி மாற்றம் ..!
ரஞ்சி கோப்பை மற்றும் இந்தியாவிற்கு உள்ளே நடக்கும் போட்டிகளில் இஷான் மற்றும் ஷ்ரேயஸ் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவுத்திருந்தும் அதில் விளையாடாமல் இருந்தது ஒரு சர்ச்சையாக இருந்தது. இது இரண்டு மாதங்களாக நடந்து கொண்டே இருந்தது. பிசிசிஐ அறிவித்தும் அதற்கு எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் அதை புறக்கணித்து கொண்டே இருவரும் இருந்தனர்.
பிசிசிஐ தலைவரான ஜெய்ஷா இதனை கண்டித்து, அனைத்து கிரிக்கெட் சங்கத்திற்கும் அதற்கு ஒப்பந்தம் செய்திருக்கும் வீரர்களுக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தில், உடற்தகுதி இருக்கும் பொழுதே உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்தும், அதில் முக்கியத்துவம் கொடுத்து விளையாடாமல் இருந்தால் அதற்கான விபரதீங்களை சந்திக்க நேரிடலாம் என்றும் மறைமுகமாக இருவருக்கும் எச்சரிக்கை செய்திருந்தார்.
Read More :- இனிமேல் இதுதான் சம்பளம் ..! இஷான் – ஷ்ரேயஷால் இளம் வீரர்கள் உற்சாகம் ..!
அந்த கடித்தையும் இருவரும் பொருட்படுத்தாமல் இருந்தனர். இந்நிலையில், 2023-2024 ஆண்டிற்கான இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்த வீரர்களின் பட்டியலை நேற்று மாலை பிசிசிஐ-யின் X தளத்தில் வெளியிட்டு இருந்தனர். அந்த வீரர்களின் பட்டியலில் ஷ்ரேயஸ் மற்றும் இஷானின் பெயர்கள் இடம்பெறவில்லை. ஒப்பந்தமான இந்திய வீரர்களை கிரேடின் அடிப்படையில் பிரித்து அதற்கான தகுந்த ஊதியத்தை கொடுப்பார்கள். இதில் இஷான் C கிரேடிலும் , ஷ்ரேயஸ் B கிரேடிலும் இருந்தனர்.
தற்போது, அந்த பட்டியலில் இவர்கள் இருவரும் இல்லை. இப்படி பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா சொன்னது போல அதற்கான விபரதீத்தை செய்து காட்டியிருக்கிறார். மேலும், அவரது இந்த நடவடிக்கை வளர்ந்து வரும் இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என ரசிகர்களால் கருதப்படுகிறது. 2023-2024 வருடத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களையும், அவர்களது கிரேட் பட்டியல் மற்றும் அவர்களுக்கு அளிக்கும் ஊதியத்தை பற்றியும் பார்க்கலாம்.
Read More :- ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம்.! விரக்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி.!
கிரேட் A+ வீரர்கள் :
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா. இவர்களுக்கு வருட ஊதியமாக 7 கோடி ரூபாய் அளிக்கப்படும்.
கிரேட் A வீரர்கள் :
ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது. ஷமி, முகமது. சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மான் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா. இவர்களுக்கு வருட சம்பளமாக 5 கோடி ரூபாய் அளிக்கப்படும்.
கிரேட் B வீரர்கள் :
சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர்களுக்கு வருட சம்பளமாக 3 கோடி ரூபாய் அளிக்கப்படும்.
கிரேட் C வீரர்கள் :
ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் மற்றும் ரஜத் படிதார். இவர்களுக்கு வருட சம்பளமாக 1 கோடி ரூபாய் அளிக்கப்படும்.