இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ அதிரடி கட்டுப்பாடு!

இந்திய வீரர்கள் அனைவரும் இனி கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

BCCI - Indian Cricket

டெல்லி: இந்திய அணி வீரர்களுக்கு 10 புதிய விதிகளை பிசிசிஐ (BCCI) அறிமுகப்படுத்தியுள்ளது. இதை மீறும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. அதன்படி, வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும். வெளிநாடு பயணங்களின் போது குடும்பத்தினர், தனிப்பட்ட உதவியாளர்களை அழைத்து வர கூடாது.

பயிற்சி ஆட்டங்களில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் உள்பட 10 விதிகளை கட்டாயமாக்கியுள்ளது. நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக, பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வீரர்கள் மைதானத்திற்கு செல்லும் போதும், பயிற்சியின் போதும் அணியினருடன்தான் பயணிக்க வேண்டும். குடும்பத்துடனோ அல்லது தனியாகவோ செல்லக்கூடாது. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்து செல்வதால் விளையாட்டில் கவனம் சிதறுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது.

இதனால், 45 நாட்களுக்கு மேல் வெளிநாட்டு தொடருக்கு சென்றால் வீரர்களுடன் 2 வாரம் மட்டும் குடும்பத்தினர் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் தனிப்பட்ட படப்பிடிப்பிலோ அல்லது விளம்பரத்திலோ கலந்து கொள்ளக்கூடாது.

அதுவே, பிசிசிஐ-ன் அதிகாரப்பூர்வ படப்பிடிப்புகள் மற்றும் செயல்பாடுகளில் பங்கேற்பது பிசிசிஐ-ன் அதிகாரப்பூர்வ படப்பிடிப்புகள், விளம்பர நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும். தேசிய அணிக்கு தகுதியான மற்றும் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் அனைவரும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்.

அத்தியாவசியமான ஒருசில காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனிப்பட்ட மேலாளர்கள், சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு உள்ளடங்கிய தனிப்பட்ட பணியாளர்களை அழைத்து செல்ல தடைவிதிக்கப்படுகிறது.

அதேபோல, உடமைகளை எடுத்துச் செல்வதில் கட்டுப்பாடுகள் உள்ளன. உதாரணமாக வெளிநாடு டெஸ்ட் தொடர்களுக்கு (3 சூட்கேஸ் மற்றும் 2 கிட் பேக்குகள்) என 150 கிலோ வரையில் வீரர்கள் எடுத்துச் செல்லலாம். உதவியாளர்கள் (2 பெரிய சூட்கேஸ் மற்றும் சிறிய சூட்கேஸ்) என 80 கிலோ வரையில் எடுத்துச் செல்லலாம்.

போட்டிகள் சீக்கிரமாக முடிந்தால் வீரர்கள் வீடு திரும்புதல் போட்டிகள் திட்டமிட்டதை விட சீக்கிரமாக முடிந்தாலும் சரி, போட்டித் தொடரின் அல்லது சுற்றுப்பயணத்தின் திட்டமிடப்பட்ட முடிவு வரை வீரர்கள் அணியுடன் இருக்க வேண்டும்.

இது போன்ற விதிமுறைகளை பின்பற்ற தவறும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தண்டனையின் ஒரு பகுதியாக ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்