ஐபிஎல் ஓவர்! உலகக்கோப்பை ஸ்டார்ட்..நியூயார்க்கிற்கு வந்த இந்திய வீரர்கள்!
டி20 உலகக் கோப்பை : இந்திய வீரர்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட நியூயார்க்கிற்கு வருகை தந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் எல்லாம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் இருக்கிறது என்றே சொல்லலாம். டி 20 உலகக்கோப்பை போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் 1 தொடங்கி நடைபெற இருக்கிறது. எனவே, உலகக்கோப்பையில் விளையாடும் அணிகள் எல்லாம் பயிற்சிகளை தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில், டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் பயிற்சிக்காக விமானம் மூலம் நியூயார்க்கிற்கு வந்து இறங்கியுள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா,முகமது சிராஜ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் வருகை தந்துள்ளனர்.
விமானம் மூலம் வந்து இறங்கிய வீரர்களுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவையும் கொடுத்தனர். இது தொடர்பான வீடியோவையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
✈️ Touchdown New York! 🇺🇸👋#TeamIndia 🇮🇳 have arrived for the #T20WorldCup 😎 pic.twitter.com/3aBla48S6T
— BCCI (@BCCI) May 27, 2024
வீடியோவை, பார்த்த ரசிகர்கள் கோப்பையை வெல்ல இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்திய கிரிக்கெட் தன்னுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி வரும் ஜூன் 5-ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் , சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.