நியூ யார்க்: கிரிக்கெட் மைதானத்தின் தன்மை குறித்து பிசிசிஐ, ஐசிசியிடம் அதிகாரபூர்வமற்ற புகார் அளித்துள்ளது.
தற்போது உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்காவில் பெரும்பாலும் கிரிக்கெட் மைதானங்கள் கிடையாது. அங்கு தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் துரிதமாக அமைக்கப்பட்டவை. அதனால் அந்த மைதானங்கள் மீதான கேள்விகள் தினமும் எழுந்தவண்னம் இருக்கிறது.
பெரும்பாலும் பந்துவீச்சுக்கு சாதகமாகவும், பேட்டிங் ஆடுபவர்களுக்கு கடும் சவாலானதாகவும் உள்ளது. குறிப்பாக, இந்தியா விளையாடிய நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களை ஒரு அணி கடந்துள்ளது.
போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, ஐசிசி அதிகாரப்பூர்வமாக அமெரிக்க மைதானத்தின் தன்மை குறித்தும் , ஆடுகளத்தை கணிக்க முடியாத நிலை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருந்தது. பிட்ச்கள் இன்னும் சரியாக மைதானத்தில் செட்டில் ஆகவில்லை என்றே கூறப்படுகிறது.
இதே மைதானத்தில் கடந்த 6ஆம் தேதி இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்கையில், அயர்லாந்து வீரர் ஜோசுவா லிட்டில் வீசிய பந்து ரோஹித்தின் கையை பதம் பார்த்தது. இதனால் அவர் மைதானத்தில் இருந்து இடையில் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நாளை இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் போட்டியும் இதே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனால், இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும்போதும், பந்துவீச்சானது பேட்டிங் பிடிப்பவர்களுக்கு சிறிது அச்சத்தை ஏற்படும் வகையில் இருக்கிறது என்ற கூற்றும் நிலவுகிறது. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கூட தொடக்க ஆட்டத்தின் போது ஆட்டத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இப்படியாக பேட்டிங்கிற்கும், பேட்டிங் பிடிக்கும் வீரர்களின் பாதுகாப்புக்கும் குறைபாடு ஏற்படும் வகையில் உள்ள மைதானத்தின் தன்மை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) , சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ஐசிசி) அதிகாரபூர்வமற்ற புகார் ஒன்றை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்களின் நலன் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில்…
கடலூர்: பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள…
சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை…
சென்னை: ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளம் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகி இருக்கிறது. அதேபோல்,…
விழுப்புரம் : பெஞ்சள் புயல், வெள்ளம் காரணமாக முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…