உலகக்கோப்பை போட்டிக்கான புது ஜெர்சி யை அறிமுகபடுத்தியது பிசிசிஐ
ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டியை முன்னிட்டு, இந்திய அணி தனது புதிய ஜெர்சி யை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை போட்டி என்றாலே உற்சாகம் அனல் பறக்கும், அதிலும் டி-20 உலகக்கோப்பை என்றால், சொல்லவா வேண்டும். அதிரடி சாகசம், எதிர்பார்ப்புகள் நிறைந்த போட்டிகள், பரபரப்பின் உச்சம் என்று நம்மை குதூகலப்படுத்த வருகிறது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் இந்த இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான புதிய ஜெர்சி யை இந்திய அணி அறிமுகப்படுத்தியது.
ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய அணி தனது புதிய ஜெர்சி யை அறிமுகப்படுத்தியது. இதற்கு “ஒரே நீல ஜெர்சி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஜெர்சி யை, பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சரான எம்பிஎல்(MPL) ஸ்போர்ட்ஸ் உம் சேர்ந்து அறிமுகப்படுத்தினர்.
இந்த புது ஜெர்சி யை, இந்திய அணி வரும் உலகக்கோப்பை தொடரிலிருந்து அணிய இருக்கிறது.