இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய அறிமுகம்.! A+ ரக நடுவர்கள்… முழு சம்பள விவரம் இதோ…

Default Image

பிசிசிஐ, புதியதாக A+ பிரிவு நடுவர்களை அறிமுக படுத்தியுள்ளது. அதர்க்கடுத்து, நடுவர்களை A,B,C என வகைப்படுத்தி அவர்களுக்கான சம்பளத்தையும் முறைப்படுத்தியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, கிரிக்கெட் வீரர்களுக்கு முதன்மை பிரிவு A, முதன்மை முக்கிய பிரிவு A+ , B என வகைப்படுத்துவது போல நடுவர்களையும் வகை படுத்தியுள்ள்ளது. அதில் புதியதாக A+ நடிகர்கள் என புதிய பிரிவை ஆரம்பித்து உள்ளது.

இந்த A+ பிரிவில் 9 நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முக்கிய பதவியில் இருக்கும் , நிதின் மேனன் அவர்களும் உள்ளார். மேலும், சர்வதேச நடுவர்களான அனில் சவுத்ரி, மதங்கோபால் ஜெயராமன், வீரேந்திர குமார் சர்மா மற்றும் KN அனந்தபத்மபானன் ஆகியோரும்,

ரோஹன் பண்டிட், நிகில் பட்வர்தன், சதாசிவ் ஐயர், உல்ஹாஸ் காண்டே மற்றும் நவ்தீப் சிங் சித்து ஆகியோர் இந்த A+ பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

பிசிசிஐ நடுவர்களின் A பிரிவில் 20 நடுவர்களும், 60 நடுவர்கள் குரூப் Bயிலும், 46 நடுவர்கள் குரூப் Cயிலும், 11 நடுவர்கள் குரூப் Dயிலும் உள்ளனர், அண்மையில் கவுன்சில் கூட்டத்தில் நடுவர்களின் முழுமையான பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.

இதில், A+ மற்றும் A பிரிவு நடுவர்கள் முதல் வகுப்பு விளையாட்டுக்காக ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள். B மற்றும் குழு C பிரிவு நடுவர்களுக்கு 30,000 ரூபாய் ஊதியம் ஒரு போட்டிக்கு வழங்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்