Harshit Rana [file image]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவிற்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
KKR vs SRH ஐபிஎல் 2024 தொடரில் மூன்றாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா, ஹைதராபாத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் மயங்க் அகர்வாலை விக்கெட்டை எடுத்த பிறகு ஒரு ‘flying kiss’ கொடுத்தார்.
அவரது செயலை பார்த்து ரசிகர்கள் பலர் கோபமடைந்தனர். இந்நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா அவரது போட்டி கட்டணத்தில் மொத்தம் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரஸ்ஸல் 25 பந்துகளில் 63* எடுத்தார். இதனால் 20 ஓவர்களில் 208 ரன்களை கொல்கத்தா அணி பெற்றது. பதிலுக்கு களமிறங்கிய ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் கடைசி பந்து வரை வெற்றி நம்பிக்கையில் விளையாடிய நிலையில் இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணி 20 ஓவரில் 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் அணியில் ஹென்ரிச் கிளாசன் 29 பந்துகளில் 8 சிக்ஸர்கள் உட்பட 63 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றும் அணி வெற்றி பெறவில்லை.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…