இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை! லட்சங்களை அள்ளி கொடுக்கும் பிசிசிஐ!!

india test 2024

BCCI இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (மார்ச்9) -ஆம் தேதி முடிந்தது. இந்த  டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்நிலையில்,  இந்த தொடரில் இந்தியா வெற்றியைப் பெற்ற உடனேயே, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வரலாற்று சிறப்புமிக்க ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் தொகை திட்டத்தை’ அறிவித்து வீரர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய அஸ்வின் ..!

அதன்படி, இந்தியாவுக்காக ஒரு சீசனில் 75 % மேல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.45 லட்சம் கூடுதல் கட்டணமாகப் அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டடுள்ளது. அதைப்போல, அணியில் பெயர் இடம்பெற்று அவர்களுடைய பெயர்  பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என்றாலும் கூட அவர்களுக்கு 22.5 லட்ச ரூபாய் வழங்கப்படவுள்ளதாம்.

Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய அஸ்வின் ..!

மேலும், 5, 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு கிட்டத்தட்ட போட்டி கட்டணத்துடன் கூடுதலாக ஒவ்வொரு போட்டிக்கும் 30 லட்ச ரூபாய்  வழங்கப்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே, 4 போட்டிகளுக்கும் குறைவான போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு உதவி தொகை கிடையாது எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்டமாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Read More :- INDvsENG : 6 மாதம் பந்து வீசல ..! இப்போ முதல் பந்துல போல்டு ..! இந்தியாவின் தூணை உடைத்த ஸ்டோக்ஸ் ..!

இந்த புதிய திட்டம் 2022-23 சீசனில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இந்தத் திட்டத்திற்காக ஒரு சீசனில் கூடுதலாக ரூ.40 கோடியை பிசிசிஐ ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்க வீரர்களை ஊக்குவிப்பதற்காகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் தொடர்ச்சியாக விளையாட வெகுமதி அளிக்கவும், பிசிசிஐ இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்