அட்ராசக்க.., இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு! பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு!
ஐசிசி சாம்பியன்ஸ் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்தள்ளது.

டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம் தேதி வென்றது. இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிவாகை சூடியது. 2025 ஐசிசி சாம்பியன்ஸ் போட்டியை பாகிஸ்தான் நடத்தி இருந்தாலும் இந்திய அணி பங்கேற்ற அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற்றன.
ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு முன்னதாக முதற்பரிசு தொகை 2.24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 19 கோடி ரூபாய்) வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற நியூசிலாந்து அணிக்கு 1.12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 9.6 கோடி) வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ-யும் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அதனபடி, இந்திய அணிக்கு ரூ .58 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது வீரரர்களுக்கு மட்டுமல்லாது, பயிற்சியாளர்கள், அணியின் சக ஊழியர்க்ள, அணி தேர்வு குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.