உலகக்கோப்பைக்கு பின் தோனியை கேப்டனாக நீட்டிக்க வைத்ததில் பெருமை கொள்கிறேன்.! – சீனிவாசன் பேட்டி.!

Default Image

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின்னர் தோனி கேப்டனாக நீட்டிக்க தான் எவ்வாறு உதவினேன் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன்  கூறியுள்ளார்.

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பின்னர், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 4-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதன்காரணமாக டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்க அப்போதைய பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் தீர்மானித்தனர்.

அதனை அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனை அவரே ஒரு பத்திரிக்கையின் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில்,’ 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தோனியை நீக்குவதற்கு பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் தீர்மானத்து இருந்தனர். அன்றைய தினம் விடுமுறை என்பதால் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தேன். இருந்தாலும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட உடனே பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றேன். அப்போது 1983ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி தோனி தலைமையில் தான் உலக கோப்பையை வென்றுள்ளது என்பதை எடுத்துரைத்தேன். இதனால் அவர் ஒரு சாதாரண வீரராக அணியில் தொடர விரும்பவில்லை எனவும் பதிவிட்டேன்.

அப்போதைய பிசிசிஐ விதிகளின்படி நிர்வாக உறுப்பினர்கள் எடுக்கும் முடிவு பிசிசிஐ தலைவர் கையெழுத்திட்டால் மட்டுமே அது நிறைவேறும். அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் விதிமுறைகளின்படி இந்த முடிவு தவறாக கூட இருக்கலாம். ஆனால் அன்றைய பொழுதில் தோனி கேப்டனாக தொடர்வதற்கு தான் ஆதரவு அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாக சீனிவாசன் கூறியுள்ளார்.

மேலும், தோனியின் ஓய்வு கருத்து ஸ்ரீனிவாசன் கூறுகையில் ‘மகேந்திரசிங் தோனி மிகவும் நியாயமானவர். அவரை அருகிலிருந்து அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. மேலும், நான் வாழ்நாளில் சந்தித்த சிறந்த கிரிக்கெட் வீரர்களின் எம்.எஸ்.தோனி விதிவிலக்காவர். அவர் எப்போதும் இந்திய அணி மற்றும் அவர் விளையாடும் அணியை பற்றி மட்டுமே சிந்திப்பார் என அவர் கூறினார்.

அவர் மேலும் தோனியை பற்றி கூறுகையில், ‘ தோனி தேர்வு குழு கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறார். அப்போது அவரது பார்வை நியாயமானதாக இருக்கும். எந்தவித பாரபட்சமும் காட்டமாட்டார். மிகவும் சமநிலையானவர். மேலும், ஒவ்வொரு வீரரின் திறன் அறிந்து அவர்களின் திறமையை எவ்வாறு கையாள்வது தோனிக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதனை ஆரவாரமில்லாமல் செய்து முடிப்பார். எல்லோரும் தோனியுடன் விளையாட விரும்புவார்கள் அவர் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஹீரோ.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்