மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதருக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில், பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் வெறும் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மேலும் அவர், 32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ரஜத் படிதார் தனது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இருப்பினும், பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதருக்கு பிசிசிஐ கடும் அபராதம் விதித்துள்ளது. அதாவது, ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ், மெதுவான ஓவர் ரேட் தொடர்பாக அவரது முதல் குற்றமாகும். எனவே படிதருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறுபுறம், புகழ்பெற்ற பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) கேப்டன் ரஜத் படிதரைப் பாராட்டினார்.
ரஜத் படிதார் பற்றி பேசிய சுனில் கவாஸ்கர், “அவரது அணி 17 வருடங்களாக பட்டத்தை வெல்லவில்லை, இப்போது அவரது வீரர்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அமைதியான கேப்டனுடன், அணியுடன் தொடர்புடைய மற்றவர்களும் தங்கள் முழு பங்களிப்பையும் அளித்து வருகின்றனர்” என்று கூறினார்.
மேலும், ஆர்சிபியின் வழிகாட்டியான தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பையும் கவாஸ்கர் பாராட்டினார். ஆர்சிபி தற்போது ஆறு புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி அடுத்தாக ஏப்ரல் 10 ஆம் தேதி பெங்களூருவில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.