அடுத்த பந்து பவுண்டரிதான்: ரிஷப் பன்ட்டுகு ஸ்டம்ப் மைக்கினால் வந்த சலசம்
- கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டியில் ஸ்டம்ப் மைக்கில் பதிவான சில விவகாரங்கள் ரிஷப் பந்திற்கு தற்போது சிறிய அவப்பெயர் வந்துள்ளது
இந்த போட்டியில் கொல்கத்தா வீரர் ராபின் உத்தப்பா பேட்டிங் பிடித்துக்கொண்டிருந்தபோது டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பன்ட் கீப்பிங் செய்து கொண்டிருந்தார் அப்போது டெல்லி அணியின் வீரர்கள் சரியான நிலையில் (பீல்டிங்) இல்லாமல் இருந்துள்ளனர்.
அதனை பார்த்த ரிஷப் பண்ட் இப்படி நின்று கொண்டிருந்தால் அடுத்த பந்து பவுண்டரி தான் என்பதை போல் பேசினார். இந்த பேச்சு ஸ்டாம்ப் மைக்கில் பதிவானது. மேலும், அவர் சொன்ன அடுத்த பந்திலேயே பவுண்டரியும் சென்றது.
ஆனால் இந்த ஆட்டம் பிக்ஸ் செய்யப்பட்டு விட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் இப்படி ஒரு சிறிய ஆதாரமற்ற விஷயத்தை வைத்துக்கொண்டு இளம் கிரிக்கெட் வீரரை அவமானப்படுத்த வேண்டாம் என பிசிசிஐ அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.