சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மருத்துமனையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரும் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கங்குலியின் ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.இந்நிலையில் கங்குலிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…