இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் – பிசிசிஐ அறிவிப்பு
இந்தியாவில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நடத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கான புதிய ஸ்பான்சர்களை ஒப்பந்தம் செய்து அறிவித்துள்ளது. அதாவது, நடப்பாண்டு முதல் 2026ம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம் செய்துள்ளது பிசிசிஐ.
அதன்படி, புதிய ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா (Campa) மற்றும் ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் (Atomberg Technologies) நிறுவனங்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், கிரிக்கெட் ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், இந்திய கிரிக்கெட்டின் அந்தஸ்தை உயர்த்தவும் இரண்டு உள்நாட்டு பிராண்டுகளான கேம்பா மற்றும் ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் உடன் இணைவதில் BCCI மகிழ்ச்சியடைகிறது.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் கீழ் உள்ள பாரம்பரிய பிராண்டான காம்பா, அற்புதமான குளிர்பான தயாரிப்புகளை அறிவிக்கவும், அரங்கங்களில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்று, ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் உபகரணங்களின் பிராண்டுகளில் ஒன்று. ஆட்டம்பெர்க் விளையாட்டிற்குள் நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது என்றுள்ளனர்.
???? NEWS ????
BCCI announces Campa and Atomberg Technologies as official partners for India Home Cricket Season 2024-26.
Details ????https://t.co/UUe1P2gyTr
— BCCI (@BCCI) January 9, 2024