ஆஸ்திரேலிய மண்ணில் அபார வெற்றி: “இந்திய அணிக்கு ரூ.5 கோடி போனஸ் வழங்கப்படும்”- பிசிசிஐ!
ஆஸ்திரேலியாக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அபார வெற்றிபெற்றதை தொடர்ந்து, இந்திய அணிக்கு ரூ.5 கோடி போனஸ் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் 328 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நேற்று நடந்த 4 ஆம் நாள் ஆட்டத்தில் களமிறங்கியது. அதில் 4 ரன்கள் மட்டும் அடித்த நிலையில், இன்று நடந்த இறுதி நாள் போட்டியில் 325 ரன்கள் அடித்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்திய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் நான்காம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி, 2 டெஸ்ட் தொடர்களில் வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் 5 கோடி ரூபாய் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது என என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The @BCCI has announced INR 5 Crore as team bonus. These are special moments for India Cricket. An outstanding display of character and skill #TeamIndia #AUSvIND #Gabba
— Jay Shah (@JayShah) January 19, 2021