“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பின், செய்தியாளர் சந்திப்பில் 18-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கும் தேதியை உறுதிப்படுத்தினார்.
மேலும் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்தில் BCCI-யின் புதிய செயலாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி தலைவராக ஜெய்ஷா பதவியேற்ற நிலையில், BCCI சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் செயலாளராக தேவஜித் சைகியா, பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஐபிஎல் தொடக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, “ஐபிஎல் 2025 (இந்தியன் பிரீமியர் லீக்) சீசன் வருகின்ற மார்ச் 23 ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆனால், முதல் போட்டி எந்த அணிகளுக்கு இடையே நடைபெறும் என்பது தற்போது முடிவு செய்யப்படவில்லை. அதே நேரத்தில், மகளிர் பிரிமியர் லீக் போட்டி நடைபெறும் இடங்களும் முடிவு செய்யப்பட்டுள்ளது, விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.
#WATCH | Mumbai: BCCI Vice President Rajeev Shukla says, “Devajit Saikia elected new BCCI secretary and Prabhtej Singh Bhatia elects as BCCI treasurer…IPL is going to start from 23rd March…” pic.twitter.com/Jd6x7U8Hou
— ANI (@ANI) January 12, 2025
கடைசியாக நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் கடந்த ஆண்டு மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. அப்பொழுது முதல் போட்டி RCB மற்றும் CSK அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மே 26-ம் தேதி கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் KKR அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியனை தட்டி சென்றது. இந்த நிலையில் இம்முறை இறுதிப் போட்டி கேகேஆரின் சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.