இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் விலகல்
நாளை இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் பேட்டர் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஃபீல்டிங் செய்யும்போது சூர்யகுமாருக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல தீபக் பந்துவீச்சின் போது வலது நாற்புறத்தில் காயம் ஏற்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தீபக் சாஹர் 2-வது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசினார். இந்த போட்டியில் தீபக் சாஹர் 2 விக்கெட் பறித்தார். சூர்யகுமார் யாதவ் 65 ரன்கள் விளாசினார். இவர்கள் தங்கள் காயங்களை குணப்படுத்த பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்கின்றனர்.
இந்திய டி20 அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், மொஹ்திப் யாதவ், சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான் ஆகியோர் இடமபெற்றுள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…