#INDvsBAN :முதலில் பேட்டிங் செய்த இந்தியா 251 ரன்கள் குவிப்பு!
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி இன்று ப்ளூம்ஃபோன்டைனில் இருக்கும் மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆதர்ஷ் சிங் அதிரடியாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். அர்ஷின் குல்கர்னி 7, முஷீர் கான் 3 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.
டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் இடம்பெறுவது சந்தேகம் – ஜாகீர் கான்!
பிறகு களமிறங்கிய கேப்டன் உதய் சஹாரன் களத்தில் நின்று அதிரடியாக விளையாடி 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளார்கள். இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஆதர்ஷ் சிங் 76, உதய் சஹாரன் 64, சச்சின் தாஸ் 26 ரன் எடுத்தனர்.
வங்காளதேசம் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மருஃப் மிருதா 5, விக்கெட்களையும், சௌத்ரி எம்டி ரிஸ்வான், மஹ்புஸூர் ரஹ்மான் ரபி ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்கள். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 251 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கவுள்ளது.