GGvsRCB : லாரா வோல்வார்ட் அதிரடி..! 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை குவித்தது குஜராத் அணி..!

Default Image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 188 ரன்கள் குவித்துள்ளது.

மகளிர் ஐபிஎல் தொடரின் 16-வது போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் பெண்கள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்துள்ளது.

RCBvsGG 1

குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் லாரா வோல்வார்ட் அரைசதம் அடித்து அசத்தினர். அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 68 ரன்களும், ஆஷ்லே கார்ட்னர் 41 ரன்களும், சப்பினேனி மேகனா 31 ரன்களும் குவித்துள்ளனர். பெங்களூர் அணியில் ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற 189 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA