சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!
சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் எடுத்துள்ளது.

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்மைதானத்தில் மோதுகிறது. தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேஸிங்கில் சொதப்பி வருவதன் காரணமாக டாஸ் வென்ற எதிரணியின் (பஞ்சாப்) ஸ்ரேயாஸ் ஐயர் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா மங்களகரமா சிக்ஸரில் ஆரம்பிக்கிறோம் என்பது போல முதல் பந்தில் சிக்ஸர் விளாசி ஆட்டத்தை தொடங்கினார். இவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக முதல் ஓவரில் பஞ்சாப் அணிக்கு 17 ரன்கள் கிடைத்தது. மற்றோரு பக்கம் சென்னை அணியும் விக்கெட்களையும் தொடர்ச்சியாக எடுத்து கொண்டு இருந்தது. பிரப்சிம்ரன் சிங் 0, ஷ்ரேயாஸ் ஐயர் 9, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4, நெஹல் வதேரா 9, கிளென் மேக்ஸ்வெல் 1 என வீரர்கள் தொடர்ச்சியாக வந்த வேகத்தில் விக்கெட் இழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
ஒரு கட்டத்தில் 7.6 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் பஞ்சாப் அடித்திருந்தது. 5 விக்கெட்கள் இழந்த காரணத்தால் இனிமேல் கொஞ்சம் நிதானமாக பஞ்சாப் விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பேச்சுக்கே இடம் இல்லை என்பது போல பிரியான்ஷ் ஆர்யா சென்னை பந்துவீச்சாளர்களை சுழற்றி சுழற்றி அடித்தார் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு அதிரடியாக விளையாடி சென்னைக்கு ஒரு கட்டத்தில் பயத்தை ஏற்படுத்தினார்.
அவருடன் இணைந்து ஷஷாங்க் சிங்க்கும் அருமையாக விளையாட 13-வது ஓவர்களில் பஞ்சாப் அணி 150 ரன்களை கடந்துவிட்டது. அதிரடியாக விளையாடி வந்த பிரியான்ஷ் ஆர்யா 9 சிக்ஸர் 7 பவுண்டரிகள் என விளாசி சதம் அடித்தார். சதம் விலகியதை தொடர்ந்து 103 ரன்களில் அட்டமிழந்து அவரும் வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த போது பஞ்சாப் 154 ரன்களில் இருந்தது.
களத்தில் ஷஷாங்க் சிங் இருந்த காரணத்தாலும் ஓவர்கள் இருந்த காரணத்தாலும் இன்னும் ரன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே, பஞ்சாப் அணிக்கு அவர் ரன்கள் குவித்து நல்ல டார்கெட் சென்னை அணிக்கு கொடுப்பார் என அவருடைய அணியை சேர்ந்தவர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்கள்.
எதிர்பார்த்ததை போலவே, அவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். அவருடைய கடைசி நேர அந்த முக்கியம் ஆட்டம் காரணமாகவும், மற்றோரு பக்கம் கலக்கிய மார்கோ ஜான்சன் 34 * காரணமாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து.
சென்னை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின், கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!
April 21, 2025