தனி ஆளாக போராடிய ரிஷப் பண்ட்! சென்னை அணிக்கு இது தான் இலக்கு!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில்166 ரன்கள் எடுத்துள்ளது.

லக்னோ : சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. 180 ரன்களுக்கு மேல் எடுத்தாலே சென்னை அணி சேஸிங் செய்வது சிரமம் என்கிற சூழலில் இருந்தும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பம் தடுமாற்றத்துடன் கலந்த அதிரடியில் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஐடன் மார்க்ராம் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவர் அட்டமிழந்தாலும் மிட்செல் மார்ஷ் ஒரு பக்கம் அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார். மார்க்ராம்க்கு பிறகு களத்திற்கு வந்த பூரன் செம பார்மில் இருந்த காரணத்தால் அவரும் ஒரு பக்கம் அதிரடி காண்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதிரடி காண்பிப்பதற்கு முன்னதாகவே அவருடைய விக்கெட்டை அன்ஷுல் காம்போஜ் வீழ்த்தி 8 ரன்களுக்கே பெவிலியனுக்கு அனுப்பிவைத்துவிட்டார்.
அவருக்கு அடுத்ததாக மிட்செல் மார்ஷ்ஷும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் லக்னோ அணி 9.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த சமயத்தில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஆயுஷ் படோனி இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி கொண்டு இருந்தார்கள். 13-வது ஓவர்கள் வரை இருவரும் விக்கெட் விடாமல் விளையாடி கொண்டு இருந்த காரணத்தால் அணிக்கு சுமாரான ஒரு ரன்கள் கிடைத்தது.
அந்த சமயம் தான் ஆயுஷ் படோனி அதிரடி காட்ட நினைத்து 22 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஆட்டமிழக்கும்போது அணி 105 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக களத்திற்கு வந்த அப்துல் சமத் பண்ட்உடன் இணைந்து நிதானமாக விளையாடி கொண்டு இருந்தனர். நிதானமாக விளையாடி கொண்டு இருந்த பண்ட் தனது கியரை மாற்றி 2 சிக்ஸர்கள் விளாசி அரைசதம் விளாசினார்.
அரை சதம் விளாசியத்தை தொடர்ந்தும் முடிந்த அளவுக்கு அதிரடியாக விளையாடினார். அப்போது 19.2 ஓவரில் ரிஷப் பண்ட் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியாக லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது.
லக்னோ அணி 166 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக சென்னை அணி 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 2, மதீஷா பதிரானா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025