பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 157 ரன்கள் குவித்துள்ளது.

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி முதல் 4 ஓவரை அதிரடியாக தொடங்கியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரயன்ஷ் ஆர்யா 22, பிரப்சிம்ரன் சிங் 33, ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
முதல் விக்கெட்டாக பிரயன்ஷ் ஆர்யா வெளியேறிய நிலையை அவருக்கு பிறகு பேட்டிங் செய்ய வந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் 6 ரன்களுக்கு வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக பிரப்சிம்ரன் சிங்கும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி 7.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்ததாக களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ், நேஹல் வதேரா இருவரும் இணைந்தாவது சிறப்பாக விளையாடுவார்கள் என்று பார்த்தால் அவர்களும் சொதப்பலான ஆட்டத்தை விளையாடி ஆட்டமிழந்து வெளியேறினார்கள். நேஹல் வதேரா ரன்அவுட் ஆகி 5 ரன்களுக்கு வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக ஷஷாங்க் சிங் களமிறங்கியிருந்தார். அவர் ஒரு பக்கம் நிதானமாக விளையாடி கொண்டு இருந்த நிலையில் மற்றொரு முனையில் இருந்த இங்கிலிஸ் பெரிய ஷார்ட் ஆட நினைத்து போல்ட் ஆகி 29 ரன்களுக்கு வெளியேறினார்.
அவர் வெளியேறிய சில நேரங்களில் மார்கஸ் ஸ்டோய்னிஸும் அவரைப்போலவே 1 ரன்களுக்கு போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் முக்கியமான நேரத்தில் தான் பஞ்சாப் தடுமாறியது என்று சொல்லலாம். 13.5 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக களமிறங்கியிருந்த ஷஷாங்க் சிங் 31*, மார்க் ஜான்சன் 25 * இருவரும் நிதானமாக விளையாடி வந்தார்கள்.
இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் களமிறங்குகிறது. பெங்களூர் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் குருணால் பாண்டியா, சுயாஷ் சர்மா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்கள்.