#BANvAFG : பங்களாதேஷ் அணி அசத்தல் பந்துவீச்சு! 156 ரன்களுக்கு சுருண்ட ஆப்கானிஸ்தான்!

BANvAFG

கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உட்பட 10 நாடுகளின் அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்த தொடரில் தற்போது வரை இரண்டு லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியை, நியூசிலாந்து அணி வீழ்த்தியது. பிறகு நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணி மோதியது. இதில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வென்றது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 7) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் முதலில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் ஜோடித் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு நல்லத்தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருந்தும், ஷாகிப் வீசிய பந்தில் இப்ராஹிம் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து களமிறங்கிய ரஹ்மத் ஷா, அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி இருவரும் பெரிதாக சோபிக்காமல் 18 ரன்களில் களத்தை விட்டு வெளியேறினர்.

இவர்கள் இருவரும் வெளியேறிய சில நிமிடங்களில் ரஹ்மானுல்லா குர்பாஸும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பிறகு விளையாட வந்த அஸ்மத்துல்லா உமர்சாயைத் தவிர ஆப்கானிஸ்தான் அணியின் மற்ற வீரர்கள், பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 37.2 ஓவர்களிலேயே முதல் இன்னிங்ஸ் ஆனது முடிந்தது.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 156 என்ற குறைந்த எண்ணிக்கையிலான ரன்களை எடுத்துள்ளது. இதில் குர்பாஸ் 47 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் மற்றும் அஸ்மத்துல்லாஹ் இருவரும் தலா 22 ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் ஷாகிப் மற்றும் ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதனையடுத்து, 157 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
Ministery Senthil Balaji
Newzeland MP Dance
Meta Fine
SA vs IND, 4th T20
Rain Update
Kanguva - Review