அயர்லாந்தை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி ..!
19 வயத்துக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8-வது போட்டியாக இன்று அயர்லாந்து அணியும் வங்காளதேச அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை கொடுத்தாலும் ரன்களை சேர்ப்பதில் சற்று பொறுமையாக விளையாடியது.
அயர்லாந்து அணி வீரரான கியான் ஹில்டன் சிறப்பாக விளையாடி 90 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதுவே அணியின் ரன்களை உயர்த்த வழிவகுத்தது. இதனால் அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 235 ரன்கள் எடுத்திருந்தது. பின் 236 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது வங்காளதேச அணி.
நமீபியாவை பந்தாடிய ஆஸ்திரேலிய அணி ..!
தொடக்கத்தில் விளையாடிய வீரர்களே நல்லதொரு தொடக்கத்தை அந்த அணிக்கு வழங்கினார். இருந்தும் இருவரது கூட்டணியில் 91 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டும் விழுந்தது. இதை தொடர்ந்து அடுத்ததடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்தது. அந்நிலையில் வங்காளதேசம் 130-4 என இருந்தது.
அதன்பின் கூட்டணி அமைத்த அஹ்ரார் அமீன், முகமது ஷிஹாப் ஜேம்ஸ் இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர். இவர்களது கூட்டணியில் 109 ரன்கள் சேர்த்தனர். இதனால் அந்த அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்களை எட்டி அபார வெற்றியை பெற்றது.