Cricket Breaking :பரபரப்பான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் வெற்றி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் – ஜிம்பாப்வே அணிகள் மோதின.டாஸ் வென்று பேட் செய்ய முடிவு செய்தது பங்களாதேஷ் அணி.
பங்களாதேஷ் அணி சார்பாக ஹொசைன் சாண்டோ அரைசதம் அடித்து அணிக்கு வலுசேர்ந்தார்.20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே பந்துவீச்சில் சீன் வில்லியம்ஸ், நகர்வா, முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
151 ரன்களை இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது , சீன் வில்லியம்ஸ் மட்டும் அரைசதம் கடந்தார்.
பரபரப்பான கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. மொஸடெக் வீசிய கடைசி ஓவரில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட்களை இழந்து 11 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கடைசி பந்து நோபாலாக , மீண்டும் ஆட்டத்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.
ப்ரீஹிட்டாக ஒரு பந்து வீசபட , அதில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படாத நிலையில் , பங்களாதேஷ் 3 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று புள்ளி போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.