இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி முன்னேறுமா ?பங்களாதேஷ் அணி!
இன்றைய போட்டியில் இந்திய அணியும் ,பங்களாதேஷ் அணியும் மோத உள்ளது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
பங்களாதேஷ் அணி நடப்பு உலகக்கோப்பையில் விளையாடிய ஏழு போட்டிகளில் மூன்று வெற்றியும் , மூன்று தோல்வியும் அடைந்து உள்ளது.அதில் ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் புள்ளி பட்டியலில் 7 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் விளையாடிய ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.ஒரு போட்டியில் தோல்வியும் ,ஒரு போட்டி மழையாலும் ரத்தானது.இதனால் புள்ளி பட்டியலில் 11 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேலும் பங்களாதேஷ் அணி விளையாட கூடிய இரண்டு போட்டியும் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு செல்ல கொஞ்சம் வாய்ப்பு உண்டு .அதிலும் தற்போது நான்காம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும் , அடுத்த இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியும் மீதம் உள்ள ஒரு போட்டியிலும் தோல்வியடைந்தால் மட்டுமே பங்களாதேஷ் அணி அரை இறுதிக்கு செல்ல வாய்ப்பு உண்டு.