T20 WC: ஜிம்பாப்வேக்கு 151 ரன் இலக்கு வைத்தது பங்களாதேஷ்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் – ஜிம்பாப்வே அணிகள் மோதின.டாஸ் வென்று பேட் செய்ய முடிவு செய்தது பங்களாதேஷ் அணி.
தொடக்க வீரர்களாக நஜ்முல் ஹொசைன் சாண்டோவும், சௌமியா சர்க்கார் களமிறங்கினர். சௌமியா சர்க்கார் டக் அவுட்டாக, மறுமுனையில் ஹொசைன் சாண்டோ அரைசதம் அடித்து அணிக்கு வலுசேர்ந்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் 14 , ஷகிப் அல் ஹசன் 23 , அஃபிஃப் ஹொசைன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர் .ஜிம்பாப்வே பந்துவீச்சில் சீன் வில்லியம்ஸ் ,ரிச்சர்ட் நகர்வா ,முசரபானி தலா 2 விக்கெட் வீழ்ந்தினர்.
20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது