தென்னாப்பிரிக்கா அணிக்கு இமாலய இலக்காக 331 ரன்கள் வைத்த பங்களாதேஷ்
இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதி வருகிறது.லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டி டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர்களாக தமீம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய தமீம் இக்பால் 9 ஒவரில் 16 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் ஷகிப் அல் ஹசன் களமிறங்கினர்.அருமையாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்திய சவுமியா சர்க்கார் 46 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.அதன் பின் ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் இவர்களின் கூட்டணி ஓன்று சேர தென்னாப்பிரிக்கா அணியின் பந்துகளை பறக்க விட்டனர்.
தென்னாப்பிரிக்கா அணி இருவரின் கூட்டணியை பிரிக்க தடுமாறிய போது சுழல்பந்து வீச்சாளர் தாஹிர் தனது பந்து வீச்சால் ஷகிப் அல் ஹசனின் விக்கெட்டை பறித்தார்.ஷகிப் அல் ஹசன் 75 ரன்னில் வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய முகமது மிதுன் 21 , முஷ்பிகுர் ரஹிம் 78 , மொசாடெக் ஹொசைன் 26 ரன்னிலும் வெளியேறினார். இறுதியாக பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 330 ரன்கள் குவித்தனர்.
தென்னாப்பிரிக்கா அணியில் கிறிஸ் மோரிஸ், பெஹல்குவேவ் ,இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டை பறித்தனர். தென்னாப்பிரிக்கா அணி 331 இலக்குடன் களமிறங்க உள்ளது.