சக வீரரை தாக்கி 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட 'கோபக்கார' கிரிக்கெட் வீரர்! விரைவில் வாழ்நாள் தடை!
வங்கதேச கிரிக்கெட் அணியில் கடும் கோபக்கார கிறிக்கெட் வீராக இருந்து வருகிறார் 33 வயதான ஷகாதத் ஹொசைன். இவர் வங்கதேச கிரிக்கெட் அணிக்காக 38 சர்வதேச டெஸ்ட் போட்டி மற்றும், 51 50ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவர் மீது ஏற்கனவே இரு சர்ச்சைகள் உள்ளன. ஒன்று 2015ஆம் அவர் வீட்டில் வேலை செய்து வந்த 11 வயது சிறுமியை தாக்கி ஹுஸைனும், அவரது மனைவியும் சில மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தனர். அந்த சிறை தண்டனை முடித்து வெளியே வந்ததும் தன் கார் மீது மோதிய ரிக்ஷா ஓட்டுனரை அடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
தற்போது புதிய சர்ச்சையாக அந்நட்டு உள்நாட்டு லீக் தொடரில் தாகா அணிக்காக குல்னா அணிக்கு எதிராக விளையாடி கொண்டிருக்கையில் அவரது அணி வீரர் அராபத் சன்னி என்பவரை பந்தை பளப்பாக்குவது தொடர்பாக எழுந்த பிரச்சனையில் அவரை ஷகாதத் ஹொசைன் தாக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து அப்போட்டி நடுவர்கள் அளித்த புகாரின் பேரில் ஷகாதத் ஹொசைனுக்கு 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பழைய புகார்களை விசாரித்து அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.