[Image Courtesy: CricTracker]
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அரசியல் வாழ்க்கையில் நுழைந்திருக்கிறார். அதுவும், வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியில் இணைந்து அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அங்கு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார் என கூறப்படுகிறது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சாகிப் அல் ஹசன், கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். சமீபத்தில், இவர் தலைமையில் வங்கதேச அணி நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரை சந்தித்தது. ஆனால், தொடர் தோல்விகளால் பெரிதாக அணி ஜொலிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல், இலங்கை வீரர் மேத்யூஸ் “டைம் அவுட்” முறையில் ஆட்டமிழந்த விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி கேப்டன் சாகிப் அல் ஹசன் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இந்த சூழலில், வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர் ஷாகிப் அல் ஹசன் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். அதுவும், வங்காளதேசத்தின் ஆளும் கடசியான வங்களாதேசம் அவாமி லீக்கில் இணைந்துள்ளார். ஷாகிப் அல் ஹசனை வேட்பாளராக நிறுத்த அக்கட்சி தயாராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஷாகிப் அல் ஹசன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து அரசியல் வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை தொடங்க இருக்கிறார்.
இந்தியாவுக்கு இந்த நடுவர் ராசியில்லாதவர்… ‘6 முறை தோல்வி’ கோபத்தில் ரசிகர்கள்..!
ஷாகிப் அல் ஹசனின் வேட்புமனுவை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற வாரியம் உறுதிசெய்ய வேண்டும். அப்படி உறுதியானால், அவர் மொத்தம் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது. மேலும், ஷாகிப் அல் ஹசனின் சொந்த மாவட்டமான மகரா அல்லது தலைநகர் டாக்காவில் போட்டியிடுவார் என நம்புவதாக வங்கதேசத்தில் ஆளும் கட்சியின் இணை பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார்.
இதனிடையே, சுமார் 170 மில்லியன் மக்கள் வசிக்கும் வங்கதேசத்தில், கடந்த 15 ஆண்டுகளாக ஹசீனா தலைமை தாங்கி ஆட்சி செய்து வருகிறார். தற்போது வங்கதேசத்திலுள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் வரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகத் தெரிவிக்கின்றன. அப்படி புறக்கணித்தால் ஷேக் ஹசினா 4-வது முறையாக ஆட்சியை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…
சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…