முக்கியச் செய்திகள்

சீட்டு கட்டு போல சரிந்த பங்களாதேஷ்…149 ரன் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி..!

Published by
murugan

பங்காளதேஷ் அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்து 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 23-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, தென்னாப்பிரிக்கா அணியின்  தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் இருவரும் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கியது முதலே குயின்டன் டி காக் சிறப்பாக விளையாட தொடங்கினார். ஆனால் மறுபுறம் விளையாடிய ரீசா ஹென்ட்ரிக்ஸ் 19 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதன்பிறகு ஐடன் மார்க்ராம் மற்றும் குயின்டன் டி காக் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஐடன் மார்க்ராம் அரைச்சதம் விளாசி 60 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக் உடன் சேர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  அவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி பந்து வீச்சாளர்கள் திணறி வந்தனர். இருப்பினும் குயின்டன் அபாரமாக விளையாடி சதம் அடித்து விளாசினார். இதையடுத்து, குயின்டன் பவுண்டரிகளை பறக்கவிட இவருடன் இணைந்த ஹென்ரிச் கிளாசென் அரைசதத்தை கடந்தார்.

இருவரும் சிறப்பாக விளையாடி வர ஹசன் மஹ்மூத் வீசிய பந்தில் குயின்டன் 140 பந்திற்கு 15 பவுண்டரி, 7 சிக்ஸர் என மொத்தம் 174 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் கிளாசென் தனது சதத்தைத் தவறவிட்டு 90 ரன்களுடன் ஆட்டமிழந்தார். கடைசியில் இறங்கிய மில்லர் வந்த வேகத்தில் 15 பந்தில் 4 சிக்ஸர் ,1 பவுண்டரி என 34* ரன் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றார். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணியில் ஹசன் மஹ்மூத் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பங்களாதேஷ் அணி 383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அணியின் தொடக்க வீரர்களாக  தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொங்கிய சிறிது நேரத்திலே தன்சித் ஹசன் 12 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் 1 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹீம் 8 ரன்னிலும், நஜ்முல் ஹொசைன் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இதை தொடர்ந்து நிதானமாக விளையாடிய தொடக்க வீரர் லிட்டன் தாஸ் ரபாடா ஓவரில் 22 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

இதனால் பங்களாதேஷ் அணி 58 ரன் எடுத்த நிலையில் 5 விக்கெட்டை இழந்தனர்.  6-வது விக்கெட்டுக்கு  களமிறங்கிய மஹ்முதுல்லாஹ் மட்டும் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி 104 பந்தில் சதம் விளாசி 111 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்  இறுதியில் பங்காளதேஷ் அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்து 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென்னாபிரிக்கா அணியில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டையும், மார்கோ ஜான்சன், ரபாடா, லிசாட் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டையும், கேசவ் மகாராஜ்  1 விக்கெட்டை பறித்தனர்.

 

Published by
murugan

Recent Posts

மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ! யார் இந்த ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார்?

மும்பை :  எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…

12 minutes ago

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

8 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

9 hours ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

10 hours ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

10 hours ago

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

11 hours ago