உலகக்கோப்பை லீக் போட்டியில் இருந்து வெளியேறியதால் பங்களாதேஷ் பயிற்சியாளர் நீக்கம் !
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 10 அணிகள் கலந்து கொண்டனர்.இதில் பங்களாதேஷ் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும் ,5 போட்டிகளில் தோல்வியும் அடைந்து உள்ளது.
ஒரு போட்டியில் முடிவு இல்லை .இதனால் 7 புள்ளிகள் பெற்று 8 -வது இடத்தில் இருந்ததால் இறுதி சுற்றுக்கு தகுதியை இழந்தது.இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ்சை தலைமை பொறுப்பில் இருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கி உள்ளது.
இது குறித்து கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில் , ஒப்பந்த காலம் வரை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ்சை நீடிக்க நாங்கள் விரும்பவில்லை . ஸ்டீவ்விடம் உங்களை நீக்க முடிவு செய்து உள்ளதாக கூறினோம் ஸ்டீவ் ரோட்ஸ் கவுரமாக விலகி கொள்வதாக கூறினார்.
மேலும் இந்த மாத இறுதியில் நடைபெறும் இலங்கை பயணத்திற்கான புதிய பயிற்சியாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என கூறினார்.