டி20I : அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கையும், வங்கதேசமும் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன் படி களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணியில் பத்தும் நிசாங்க 28 பந்துக்கு 47 ரன்கள் எடுத்து பொறுப்புடன் விளையாடி அணியை கரை சேர்த்தார். இதன் காரணமாக முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, பேட்டிங் செய்த வங்கதேச அணி வீரர்கள் லிட்டன் தாஸ் 36, தவ்ஹித் ஹிரிதோய் 40 ரன்கள் விளாச, 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை தனது போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நெதர்லாந்து நேபாளத்தை வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் இலங்கையை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…