NEDvBAN [file image]
டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ‘D’ பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேச அணியும், நெதர்லாந்து அணியும் மோதியது.
நடப்பாண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய 27-வது போட்டியாக வங்கதேச அணியும், நெதர்லாந்து அணியும் கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் தன்சித் ஹசன் மற்றும் ஷாகிப் அல் ஹசனின் அற்புதமான கூட்டணியில் வங்கதேச அணி நல்ல ஒரு ஸ்கோரை நோக்கியே நகர்ந்தது. அதை தொடர்ந்து விளையாடிய இருவரும், ஷாகிப் 64 ரன்களுக்கும், தன்சித் ஹசன் 35 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
இதனால், அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் பெரிதளவு ரன்கள் அடிக்காததால் வங்கதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக வான் மீகெரென் மற்றும் ஆர்யன் தத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
அதனை தொடர்ந்து 160 ரன்களை எடுப்பதற்கு நெதர்லாந்து அணி பேட்டிங் களமிறங்கியது. தொடக்கம் முதலே நிதானத்துடனும், பொறுமையாகவும் தேவைப்பட்ட நேரத்தில் பவுண்டரிகள் என போட்டிக்கு தேவையானதை சரியாகவே செய்து வந்தனர். இருப்பினும் நன்றாக விளையாடும் வீரர்கள் நிலைத்து நிற்காமல் விக்கெட்டையும் இழந்து வந்தனர்.
இதன் காரணமாக கைவசம் விக்கெட்டுகள் இல்லாத காரணத்தால் 15 ஓவர்களுக்கு மேல் பவுண்டரியில் ரன்களை எடுக்க முடியாமல் நெதர்லாந்து அணி திணறியது, மேலும் வங்கதேச அணியின் பந்து வீச்சும் மிகவும் சிறப்பாகவே அமைந்தது. இதனால் 20 ஓவர்களில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
வங்கதேச அணியில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மேலும், இதன் மூலம் வங்கதேச அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கும் புள்ளிப்பட்டியலில் பலமான பாதையையும் அமைத்துள்ளது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…