நேபாளை பந்தாடி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது வங்கதேசம்.!!

Published by
அகில் R

டி20I: இன்று ‘D’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது.

நடப்பாண்டு 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நடைபெற்று வரும் லீக் போட்டிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற இந்த தொடரின் 37-வது போட்டியில் நேபால் அணியும், வங்கதேச அணியும் மோதியது. இந்த போட்டியில் வங்கதேச வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என நெருக்கடியான சூழ்நிலையுடன் போட்டிக்கு களமிறங்கியது வங்கதேச அணி.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி, வங்கதேச அணியை முதலில் பேட்டிங் செய்ய பரிந்துரைத்தது. இதன் மூலம் முதலில் பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி ரன்களை சேர்த்து கொண்டே இருந்தாலும், மறுமுனையில் விக்கெட்டுகளையும் இழந்து வந்தது. இதனால் பேட்டிங்கில் தடுமாற்றத்தை கண்ட வங்கதேச அணி 19.3 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 106 ரன்களை மட்டுமே எடுத்தது.

வங்கதேச அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் 20 ரன்களை தாண்டவில்லை, இருப்பினும் அதிகாட்சமாக ஷகிப் அல் ஹசன் 17 ரன்களை எடுத்திருந்தார். அதனை தொடர்ந்து எளிய இலக்கான 107 ரன்களை எடுக்க பேட்டிங் களமிறங்கியது நேபாள் அணி. எளிய இலக்கை வேகமாய் அடிக்க முயற்சித்ததன் காரணாமாக, எந்த ஒரு வீரரும் நிதானமாக விளையாடாததால், அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

மேலும், வங்கதேச அணியின் பந்து வீச்சும் நேபாள் அணிக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. இதனால், 19.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச இந்த போட்டியில் வெற்றியை பெற்றது. சிறப்பாக பந்து வீசிய தன்சிம் ஹசன் சாகிப் 4 விக்கெட்டுகளும், முஸ்தபிஸுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டனர்.

மேலும், இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் வங்கதேச அணி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், வங்கதேச அணியுடன், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப்-1 இல் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

9 hours ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

9 hours ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

10 hours ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

11 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

11 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

12 hours ago