விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி தடுமாறி தான் விளையாடியது என்று சொல்லவேண்டும். விக்கெட்களை தொடர்ச்சியாக விட்டுக்கொண்டிருந்த காரணத்தால் நினைத்தபடி இலக்கை எடுக்க முடியவில்லை.
தொடர்ச்சியாக விக்கெட் இழந்துகொண்டு இருந்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 33,ஷஷாங்க் சிங் 31* ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. எப்போதும் அதிரடியான தொடக்கத்தை கொடுக்கும் சால்ட் இந்த முறை அதிரடி காட்ட தவறினார் என்று சொல்லலாம்.
1 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், அடுத்ததாக வந்த படிக்கல் விராட் கோலியுடன் இணைந்து பக்காவான அதிரடி ஆட்டத்தை காண்பித்தார். இருவரும் இணைந்து 102 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். இதன் காரணமாக தான் பெங்களூர் அணி வெற்றிப்பாதைக்கு சென்றது என்று சொல்லலாம். இருவரும் சிக்ஸர் பவுண்டரி என அதிரடி காட்டிய நிலையில் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தார்கள்.
அந்த சமயம் தேடி வந்த வர பிரசாதமாக படிக்கல் விக்கெட் பஞ்சாபிற்கு கிடைத்தது. சிக்ஸர் விளாச நினைத்து பெரிய ஷார்ட் ஆட முயன்று 61 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இவர் ஆட்டமிழக்கும்போது 12 ஓவர்களில் பெங்களூர் 109 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் விராட் கோலி மற்றும் அணியின் கேப்டன் படித்தார் சிறப்பாக விளையாடினார்கள்.
அந்த சமயம் படித்தார் போட்டியை சீக்கிரம் முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு பெரிய ஷார்ட் ஆட முயற்சி செய்து 12 ரன்களுக்கு வெளியேறினார். இருப்பினும், விராட் கோலி (73*), அதிரடி ஆட்டம் காரணமாக பெங்களூர் அணி 18.5 ஓவர்களில் 159 எடுத்து இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த இரண்டு அணிகளும் இந்த சீசனில் கடந்த முறை மோதியபோது பஞ்சாப் வெற்றிபெற்றிருந்தது. இந்த முறை பெங்களூர் வெற்றி பெற்று பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுத்துள்ளது.