கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது.

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய பெங்களூர் அணி மும்பை அணிக்கு அதிரடி காட்டியது என்று தான் சொல்லவேண்டும்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சால்ட் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் போல்ட் ஆகி 4 ரன்களுக்கு வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் விராட் கோலியுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டு விளையாடினார். விராட் கோலி, படிதார் ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து.
அடுத்ததாக 222 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மும்பை அணியின் முக்கிய வீரர் ரோஹித் சர்மா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து ரியான் ரிக்கல்டனும் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் மும்பை அணி சற்று தடுமாறியது என்று சொல்லலாம்.
அதன்பிறகு வில் ஜாக், சூர்யகுமார் யாதவ் இருவரும் அதிரடியாக இல்லாமல் கொஞ்சம் நிதானமாக விளையாடி கொண்டு இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் வில் ஜாக் 22, சூர்யகுமார் யாதவ் 28 ரன் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இதன் காரணமாக மும்பை வெற்றிபெறும் வாய்ப்பும் ரசிகர்களுக்கு முற்றிலும் நின்று போனது. இருந்தாலும் கிரிக்கெட் என்பது எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பது போல திலக் மற்றும் ஹர்திக் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள் என்று தான் சொல்லவேண்டும்.
ஏனென்றால், ஹர்திக் பாண்டியா வந்த முதல் பந்திலே சிக்ஸர் விளாசி தொடங்கினார். 8 பந்துகளில் 33 ரன்கள் விளாசி போட்டி இன்னும் முடியவில்லை இருக்கிறது என்பது போல அதிரடி காட்டினார். மற்றோரு முனையில் இருந்த திலக்கும் அதிரடி கலந்த நிதானத்துடன் பேட்டிங் செய்துகொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 65 ரன்கள் தேவை என்ற நிலைமையில் இருந்த போது போட்டியில் பெங்களூர் வெற்றிபெறுமா? மும்பை வெற்றிபெறுமா என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்தது.
பரபரப்பாக சென்று கொண்டிருந்த போட்டியில் திலக் வர்மா அரைசதம் விளாசி போட்டியை மும்பை பக்கம் கொண்டு வந்தார். 17 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் மும்பை எடுத்தது. இதனால் 3 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சமயம் 18-வது ஓவரின் 4-வது பந்தில் திலக் வர்மாவை 56 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார்.
கடைசியாக அணியின் நம்பிக்கையாக இருந்த ஹர்திக் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் வெற்றி நம்பிக்கை மும்பை அணிக்கு முற்றிலும் போனது. கடைசி 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சார்ட்னர், சஹர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக 3 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நமன் களத்தில் நின்றார். முதல் பந்து பவுண்டரி..அடுத்த பந்து விக்கெட் அடுத்த பந்து டாட் ஆனது. இதன் காரணமாக பெங்களூர் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2016-ஆம் ஆண்டுக்கு பிறகு பெங்களூர் வன்கடே மைதானத்தில் வெற்றிபெற்றது.