IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பெங்களூரு அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 206 ரன்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் விராட் கோலி 51 ரன்களும், ரஜத் படிதார் 50 ரன்களும், கேமரூன் கிரீன் 37* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஹைதராபாத் அணியில் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட்டையும், நடராஜன் 2 விக்கெட்டையும் பறித்தனர். ஹைதராபாத்தில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இருவரும் களமிறங்கினர்.
முதல் ஓவரின் கடைசி பந்தில் டிராவிஸ் ஹெட் 1 ரன் எடுத்து கரண் சர்மாவிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். அடுத்து ஐடன் மார்க்ரம் களமிறங்க அதே நேரத்தில் மறுபுறம் இருந்த தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 13 பந்தில் 31 ரன்கள் குவித்து 4 -வது ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்த ஓவரில் ஐடன் மார்க்ரம் 7 ரன்னிலும் , அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 13 ரன்களிலும், அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் 7 ரன்களிலும், அப்துல் சமத் 10 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஹைதராபாத் அணி 85 ரன்களுக்கு 6 விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அடுத்து வந்த கேப்டன் பாட் கம்மின்ஸ் 11 -வது ஓவரில் தொடந்து 2 சிக்ஸர் விளாசினார். அதிரடியாக விளையாடிய கம்மின்ஸ் 15 பந்தில் 31 ரன்கள் எடுத்து கேமரூன் கிரீனிடம் கேட்சை கொடுத்து நடையை கட்டினார். இருப்பினும் மத்தியில் இறங்கிய ஷாபாஸ் அகமது நிதானமாக விளையாடி 40* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டை பறித்தனர். இதுவரை பெங்களூரு அணி 9 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 2 போட்டியில் வெற்றியும், 7 போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது.
அதே நேரத்தில் ஹைதராபாத் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் தழுவி உள்ளது. தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வி தழுவி வந்த பெங்களூரு அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…