நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16 வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது . இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தனர்.
அடுத்ததாக 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 16.3 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 52 பந்துகளில் 101 ரன்கள் மற்றும் விராட் கோலி 47 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இதுவரை 4 போட்டிகள் விளையாடி 4 போட்டிகளும் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற சாதனையும் வைத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சென்னை அணியும், மூன்றாவது இடத்தில் டெல்லி கேப்பிட்டஸ் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.
ஐந்தாவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஆறாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஏழாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் , எட்டாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் உள்ளது.
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…