#IPL2022: திரில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி..!

Published by
murugan

பெங்களூர் அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக ரஹானே, வெங்கடேஷ் இருவரும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்து கொல்கத்தா அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற கடைசியில் களமிறங்கிய ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி 25 ரன்கள் குவித்தார். அதில் 3 சிக்சர் ஒரு பவுண்டரி அடங்கும்.

இறுதியாக கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பெங்களூர் அணியில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3,  ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டை பறித்தனர். 129 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக பாஃப் டு பிளெசிஸ்,
அனுஜ் ராவத் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே அனுஜ் ராவத் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

கடந்த போட்டியில் அடித்தது போல விராட் , பாஃப் டு பிளெசிஸ் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட் 12, பாஃப் டு பிளெசிஸ் 5 என ஒற்றை இலக்கு ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.  அடுத்து இறங்கிய டேவிட் வில்லி 3 பௌண்டரி விளாசி 18 ரன்னில் நிதிஷ் ராணாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் கண்ட ஷாபேஸ் அகமது 3 சிக்ஸர் உட்பட 27 ரன்கள் குவித்து ஸ்டாம் அவுட் ஆனார். மத்தியில் இறங்கிய ரதர்ஃபோர்ட் 28 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியாக பெங்களூர் அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் டிம் சவுதி 3, உமேஷ் யாதவ் 2 விக்கெட்டை பறித்தனர். இதுவரை பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் தலா 2 போட்டிகளில் விளையாடிய தலா 1 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது.

Published by
murugan

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

8 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

29 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

32 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago